திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
திருச்சி,
கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் அய்மான் கல்லூரியின் லியோ சங்கம் இணைந்து கோவிட்-19 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் 18 வயதிற்க்கு மேற்ப்பட்ட அனைத்து வயதினரும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்த தவறிய அய்மான் கல்லூரி மாணவிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு கொரோனா கோவிட்-19 தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமை திருச்சி மாநகராட்சி, மாவட்ட பொது சுகாதாரபணித்துறை மருத்துவர் சுமதி, நகர்ப்புற பொது சுகாதார மையம் செவிலியர் ரெமி, ஐஸ்வர்யா, சண்முகப்ரியா, பிரதீபா மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜோதி பாசு, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் திரு.ஜேசுராஜ், சுகாதாரத்துறை உதவி மேற்பார்வையாளர் பாஸ்கர் மற்றும் விவேக், ஜெப்ரி பிரின்ஸ், ரவி களிய மூர்த்தி ஆகியோருடன் இனைந்து அய்மான் கல்லூரி பொருளாளர் அப்துல் மஜீத், அய்மான் கல்லூரி இயக்குநர் முனைவர் எம்.எம்.ஷாகுல் ஹமீது , கல்லூரி முதல்வர் முனைவர். சுஹாசினி எர்னெஸ்ட் அவர்களின் தலைமையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்கள்.
கோவிட்-19 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் அய்மான் கல்லூரி மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்புடனும் சமூக இடைவெளியுடனும் ஒவ்வொருவருக்காக கோவிட் ஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அய்மான் கல்லூரியின் அருகில் உள்ள கிராமமான சாத்தனூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறை மருத்துவர் சுமதி மேற்பார்வையில் செவிலியர் தடுப்பூசி செலுத்தினர்.