திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் பங்கேற்பு
திருச்சி, ஆகஸ்ட்.29-
திருச்சி மாவட்டம் திருவானைக் கோவில் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான ஆர் .மனோகரன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் பழனிமாணிக்கம் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் பகுதி செயலாளர்கள்ஜங்ஷன் தன்சிங் , சதீஷ்குமார் , ரமேஷ் , கமுருதீன் , வேதாந்திரி நகர் பாலு ,வெங்கடேசன் ,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பெஸ்ட் பாபு ,மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மணிவண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் ராமலிங்கம் ,மாவட்ட மீனவர் அணி செயலாளர் கணேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு செயலாளர் கோமதி மங்கை ,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பஷீர்அகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நாகநாதர் ராஜீ, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எனர்ஜி அப்துல் ரகுமான், உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.