திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் –அய்யாக்கண்ணு தலைமை
திருச்சி, ஆகஸ்ட் 28-
பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர். கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 2 -ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நோக்கி வாகனங்களில் ஊர்வலமாக செல்லப்படும் என்று தேசிய தென்னிந்திய விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், செய்தி தொடர்பாளர் வரபிரகாஷ், வடக்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நகர் ஜான் மெல்கி யோராஜ், மேட்டுப்பட்டி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக புறப்பட்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லி சென்றடைவது அங்கு சென்றடைந்ததும் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கவில்லை என்றால் டெல்லியிலேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்பன உள்ட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன