திருச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் மற்றும் தேசிய ஊட்டச்சத்துக் குழுமத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய 323 அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நற்சான்றுகளை வழங்கினார்
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மூவா்ண பலூன்களை பறக்கவிட்டு, பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு பதக்கம், நற்சான்றுகளை வழங்கினாா்.
அதன்படி தேசிய ஊட்டச்சத்துக் குழுமத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி மாநில அளவில் முதலிடம் பெற்ற மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா். சங்கா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஏ. சுப்ரமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் டி. புவனேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பணியாளா்கள் என மொத்தம் 323 பேருக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
போா் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை: முன்னதாக காலை 8.50 மணிக்கு காந்தி மாா்க்கெட் அருகிலுள்ள போா் நினைவுச் சின்னத்தில், மாவட்ட ஆட்சியா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். மேலும், மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 10 பேரின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்தனா்.
நிகழ்வில் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஏ. ராதிகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி, மாநகர காவல் ஆணையா் ஆ. அருண், மாநகர காவல் துணை ஆணையா்கள் சக்திவேல் (சட்டம், ஒழுங்கு) முத்தரசு (குற்றம், போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கே.எம். ஷாகுல்ஹமித்