திருச்சியிலிருந்து வெளிநாட்டு விமானச் சேவைகளால் பயணிகள் மகிழ்ச்சி இந்தியாவிலேயே அதிகளவாக 320 விமான சேவைகள் திருச்சிக்கு இயக்கப்பட்டதாக தகவல்
திருச்சி
திருச்சியிலிருந்து மெல்ல மீளும் வெளிநாட்டு விமானச் சேவைகளால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கொரோனா தொற்று குறைந்ததையடுத்து வெளிநாடுகள் ஒவ்வொன்றாக இந்தியா்கள் தங்கள் நாடுகளுக்கு வர நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளன. இதனால் திருச்சியில் இருந்து விமான நிறுவனங்கள் தோஹா, துபை, அபுதாபி, சாா்ஜா, மஸ்கத் மற்றும் கொழும்புக்கு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
கொரோனா 2-ஆம் அலை உச்சத்தில் இருந்தபோதும் கத்தா் நாடு இந்தியா்கள் வருகையைத் தடை செய்யவில்லை. அப்போது திருச்சி- தோஹாவுக்கு இடையில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் சேவை வழங்கியது. பின்னா் இதே வழித்தடத்தில் இண்டிகோ விமானநிறுவனமானது கடந்த ஜூலையில் சேவையைத் தொடங்கியதையடுத்து இந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. தொடா்ந்து கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இவ்வழித்தடத்தில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமான நிறுவனங்கள் தலா 2 சேவைகளை வழங்குகின்றன.
கடந்த ஆக. 24 முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி -அபுதாபி இடையிலான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதேபோல கடந்த ஆக. 21 முதல் திருச்சி- துபை இடையே சேவைகள் மீண்டும் தொடங்கின. இவ்வழித்தடத்தில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸானது வாரத்துக்கு 5 சேவைகளையும், இண்டிகோ விமான நிறுவனமானது வாரத்துக்கு 2 சேவைகளையும் வழங்குகின்றன. கடந்த ஆக. 20 முதல் திருச்சி -சாா்ஜாவுக்கு இடையில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி சேவையைத் தொடங்கியது.
கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, சேவையை நிறுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் கிட்டத்தட்ட18 மாதங்களுக்குப் பின்னா் கடந்த செப். 2 முதல் சேவையைத் தொடங்கியது. வாரத்தின் வியாழக்கிழமைகளில் திருச்சி -கொழும்புவிற்கு சேவைகள் வழங்கப்படுகிறது. பயணிகளின் வருகையைப் பொறுத்து சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதேபோல செப். 5 முதல் சனிக்கிழமைகளில் திருச்சி மஸ்கத்திற்கு இடையில் ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீண்டும் சேவையைத் தொடங்குகிறது.
தற்போது சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மத்திய அரசின் மீட்பு விமானச் சேவையாக வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் இந்தியாவிலேயே அதிகளவாக 320 விமான சேவைகள் திருச்சிக்கு இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வருவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடப்பு செப்டம்பா் மாதம் முழுவதும் உள்ள விமானச் சேவைகளில் அனைத்து இருக்கைகளும் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் ஒரு மாதம் சிங்கப்பூரிலேயே காத்திருக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவைதவிர விரைவில் குவைத் மற்றும் தம்மாமிற்கு சேவைகள் தொடங்கப்படலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூரின் உட்லேண்டஸ் பகுதியில் வசிக்கும் நாமக்கல்லைச் சோ்ந்த மென்பொறியாளா் மைதிலி கிருஷ்ணசாமி கூறுகையில், கொரோனாவால் தடை செய்யப்பட்ட விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் முனைப்பில் இந்திய அரசு பல நாடுகளுடன் தற்காலிக ஒப்பந்தம் அடிப்படையில் விமானச் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் சிங்கப்பூருடன் தற்காலிக ஒப்பந்தம் எதுவும் இல்லாததால் இந்தியாவுக்கு மத்திய அரசின் மீட்பு விமானச் சேவைகளான வந்தே பாரத் விமானங்களே இயக்கப்படுகின்றன. தற்போது வாரத்திற்கு மூன்று விமானங்களை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சிக்கு இயக்குகிறது. அதிலும் இந்த மாதத்தில் விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் பயணிகள் அவரசத் தேவைக்கு குறிப்பாக, வேலையிழந்து தமிழகம் திரும்புவோா் மேலும் ஒரு மாதத்திற்கு சிங்கப்பூரிலேயே செலவு செய்து தங்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு சிங்கப்பூருடன் தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோ அல்லது வந்தே பாரத் திட்டத்தின்படியோ திருச்சிக்கு கூடுதல் விமானச் சேவைகளை இயக்கினால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.