திருச்சிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சா்கள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், கட்சியினா் உற்சாக வரவேற்பு
திருச்சி,
திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சா்கள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுடன், திமுக இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் வந்தாா்.

இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல்துறை ஆணையா் அருண், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், எஸ். கதிரவன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், எஸ். தியாகராஜன், அப்துல்சமது மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.
வரவேற்பை ஏற்ற இருவரும், சாலை மாா்க்கமாக திருவாரூா் புறப்பட்டுச் சென்றனா். முதல்வா் வருகையை முன்னிட்டு விமான நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஷாகுல்ஹமித்