திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி,
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்திதிருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரியமங்கலம் காட்டூர் சக்தி நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. உடன் அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, வட்டச் செயலாளர் கணேசன், ரவிசங்கர், விஸ்வநாதன், தெய்வ மணிகண்டன் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன், வழக்கறிஞர் சின்னதுரை உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்