தாெண்டியில் கடற்கரை எதிரே உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகம், பழுதடைந்தும் உள்ளநிலையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை
தொண்டி, அக்.2-
இராமநாதபுரம் மாவட்டம், தாெண்டியில் கடற்கரை பள்ளிவாசல் எதிரே உள்ள மின்கம்பம் பழுதடைந்து கம்பிகள் பெயர்ந்து எப்போது விழும் என தெரியாத நிலையில் காணப்படுகிறது. இதிலிருந்து அதற்கடுத்த மின் கம்பத்திற்கு இடையே உள்ள மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இவ்வழியாக அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி, பயணியர் விடுதி, மகாசக்திபுரம் மீனவர் குடியிருப்பு ஆகியவை உள்ளது. முன்பு இதே பகுதியில் வானிலை ஆராய்ச்சி நிலையம் எதிரே செல்லும் மின்சாரம் பாயும் மின் கம்பி அறுந்து விழுந்து அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு இறந்த சம்பவம் நடந்துள்ளது. மாலை நேரத்தில் இந்த தாழ்வான மின் கம்பிக்கு கீழ் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். நள்ளிரவுக்கு பிறகு மீனவர் கடலுக்கு இவ்வழியாக செல்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்,தாழ்வாக செல்லும் மின் கம்பியை இழுத்துக் கட்டவும், இதே போல பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை இழுத்து கட்டவும், பழுதடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் ஊன்றவும் இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அக்பர் சுல்தான் உட்பட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்