தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல பொது மக்கள் பயன்படுத்திய பாதையினை ரயில்வே துறையினர் அடைத்ததால் மாற்று பாதை அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை,ஆக-16,
தாம்பரம் அடுத்த பழைய ஜி.எஸ் .டி சாலை இரும்புலியூரில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இனைக்கும் விதமாக 30 வருடங்களுக்கு முன்னர் ரயிக்வே கேட் இருந்துவந்துள்ளது இதனால் பொது மக்கள் தாண்டவத்தை கடந்து செல்லும் போது அதிக விபத்துகள் நடந்துள்ளன இதனால் ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டை மூடினார் அதன் பின்னர் பொது மக்கள் சிறு பாதையை அமைத்து கிழக்கு தாம்பரம் இருந்து மேற்கு தாம்பரம் செல்லுவதற்கு தாண்டவத்தை கடந்து சென்று வந்துள்ளார் இதனையடுத்து திடிரென அகற்றபட்டதால், பள்ளி, கல்லூரி அலுவலகம் செல்லுவோர் தண்டவளத்தை கடந்து சென்றுள்ளனர். அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் நேற்று இரவு திடிரென ரயில்வே காவல் துறையினர் அப்பகுதியினை அடைத்துள்ளனர்.இதனால் 3கிலோ மீட்டர் வரை சுற்றி செல்வதாக ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .தகவல் அறிந்து வந்த சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் மாற்று பாதை அமைத்து தருவதாக பேச்சு வார்த்தை நடத்திய அனைவரும் கலைந்து சென்றனர். நமது நிருபர்