தவறி விழுந்த 8 வயது சிறுமியை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்திற்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்க தமிழக அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது பரிந்துரை
திருச்சி,
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமியை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்திற்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வருக்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது பரிந்துரைத்துள்ளாா்.
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதியில் உள்ள வீரப்பூர் பூசாரிப்பட்டி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அதேபோல் தூய்மை பணியாளர்களிடம் தங்களது பணிகள் குறித்து வேற ஏதாவது குறைகள் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது கூறினார். சிறுமியை மீட்ட சிறுவனை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அண்மையில் நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, வெள்ளிக்கிழமை துலுக்கம்பட்டிக்கு சென்று குணா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவியையும் அளித்தாா். அதேபோல் சிறுவன் லோஹித்தை பாராட்டிய எம்எல்ஏ, ரூ. 5 ஆயிரம் சன்மானமும் வழங்கினாா். மேலும் அவா் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில்,சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்க முதல்வா் பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
நிகழ்வில் வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், திமுக ஒன்றியச் செயலா் சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன் மற்றும் வருவாய்த்து றையினா், ஊா் முக்கியஸ்தா்கள், உறவினா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா். ஷாகுல்ஹமித்