தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு வக்பு வாரிய முதல் கூட்டம்
சென்னை
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று காலை தமிழ்நாடு வக்பு வாரிய கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது இதில் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்ததும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம் அப்துல் ரஹ்மான் ஜூலை 22, 2021 அன்று தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையில் அமைந்த பிறகு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் இரண்டு நாள் கூட்டம் 29.09.2031 புதன்கிழமை காலை சென்னை, வள்ளல் சீதக்காதி நகர், ஜாபர் சிராங் தெருவிலுள்ள அதன் தலைமையகத்தில் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப. அப்துல் சமது, ஆளூர் ஷா நவாஸ், பாத்திமா முஸ்ஸபர், ஐ.ஏ.எஸ் அதிகாரி மரியம் ஆசியா, வக்ஃப் வாரிய செயல் அலுவலர் டாக்டர் பரிதா பானு மற்றும் அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து பேசப்படுகிறது. பின் இறுதியாக உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பின் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும்.