தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் தாயார் மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
திருச்சி,
தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் தாயார் ஹாஜ்ஜா ஐனுல் மர்ளியா மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவருமான எம். அப்துர் ரஹ்மான் தயார் ஹாஜ்ஜா ஐனுல் மர்ளியா 06.09.2021 திங்கள்கிழமை இரவு திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 07.09.2021 செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் காலமனார்கள். இந்த தகவலை அறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவருமான எம். அப்துர் ரஹ்மான், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். சிராஜூதீன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர்களது உடல் திருச்சி பொன்நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்று சிறிது நேரம் ஜனாஸா உறவினர்கள், பொதுமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆகியோர் பார்ப்பதற்கு வைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊரான திருவாரூர் முத்துப்பேட்டைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் முத்துப்பேட்டை முஹையத்தீன் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இ.யூ. முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான எம். அப்துர் ரஹ்மான் அவர்களின் தாயாரும் முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவர் முத்துப்பேட்டை மர்ஹூம் நெ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான ஹாஜ்ஜா ஐனுல் மர்ளியா (வயது 78) 7.9.2021 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் திருச்சியில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா 7.9.2021 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மறைவு செய்தியறிந்து இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான எம். அப்துர் ரஹ்மான் அவர்களின் அன்பு தாயார் ஐனுல் மர்ளியா (வயது 78) திடீரென்று உடல் குறைவு ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் மரணமுற்ற செய்தி மிகுந்த வேதனையைத் தந்தது.
சமீபத்தில் தான் அவ ருடைய குடும்பத்தில் தனது பேரப் பிள்ளைகளுக்கு சிறப் பாக திருமணம் நடந் தது. அந்த மகிழ்ச்சியில் திளைத் திருந்த அம்மையார் அவர்கள் திடீரென மரண முற்றது அவரின் குடும்பத் திற்கு மட்டுமல்லாமல் நம் அனை வருக்குமே ஓர் அதிர்ச்சியான தகவலாகிவிட்டது.
எம். அப்துர் ரஹ்மான் அவரின் தந்தை முத்துப்பேட்டை நெ.மு. என்று அழைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் காயிதே மில்லத் காலத்திலிருந்து இ.யூ. முஸ்லிம் லீகில் முன்னணி தலைவராக இருந்து பாடுபட்டவர்.
முத்துப்பேட்டையில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த அமைய்யார் நெ.மு. ஹாஜியார் அவர்களுக்கு சமுதாயப் பணியிலும் ஜமாஅத் சேவையிலும் முஸ்லிம் லீகின் தொண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கி குடும்பத்தையும் குடும்பத்திலுள்ள தனது மக்களையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதில் பெரும் பாடுபட்டவர். சமுதாய மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்று பாராட்டுக்குரிய பல நல்ல காரியங்களைச் செய்தவர் அம்மையார். அவர்களின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல்; சமுதாய நலன் விரும்பிகள் அனைவருக்குமே மிகப் பெரிய இழப்பாகிவிட்டது. அவரின் மறைவால் வாடும் எம். அப்துர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இழப்பை தாங்கக்கூடிய சக்தியை இறைவன் தரவேண்டுமென்று பிரார்த்திப்போம். அவருடைய மறுமை வாழ்விற்காக எல்லோரும் எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது மறைவிற்கு அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின தலைவர் மூத்த செய்தியாளர் என்.எம். அமீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர, மாநில துணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், ப. அப்துலா சமது, ஆளூர் ஷாநவாஸ், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, வஃக்ப் வாரிய செயல் அலுவலர் பரிதா பானு, வஃக்ப் வாரிய உறுப்பினர் பாத்திமா முஸ்ஸபர், ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஏ.கே. காஜா நஜ்முத்தீன், கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் மொய்தீன், திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முஹம்மது யூனூஸ், டாக்டர் அஷ்ரப், அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாம்தீன், தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளர் கவிஞர் சல்மா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தார்கள்.