தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை சந்திது கோரிக்கை மனு.
தமிழக வக்ஃப் வாரியத்தில்19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை மாநில செயல் தலைவர் காஞ்சி அ.அயுப்கான் தலைமையில் சந்தித்த தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பினர், குழு ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி ஜனாப், சம்சுதீன்
மற்றும் செயளலர் முஹம்மத் கௌஸ் ஒருங்கிணைப்பில், மாண்புமிகு கே.எஸ். செஞ்சி மஸ்தான், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தனர்,
செஞ்சியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மாநில, மாவட்ட ஆலோசனை குழு சார்பில் செயல் தலைவர் ஜனாப் காஞ்சி அயுப்கான் அவர்கள் தலைமையில் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கும் மற்றும் வக்பு சொத்துக்களை மீட்பதற்கும் 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்,
நிகழ்வில் ஜனாப் ஷேக் நூர்தீன் கடலூர் மாவட்டம்,
ஜனாப் மெளலவி முஹம்மது அபூபக்கர் ஜமாலி திருப்பத்தூர்,
ஜனாப் செஞ்சி அலீ அஹ்மத், ஜனாப் ஜஹாங்கிர் கான், ஜனாப் சென்னை ஷேக் அசீசுத்தீன்,
ஜனாப் வக்கீல் ஆரிஃப், ஜனாப் சர்புதீன், ஜனாப் ஹம்சா, ஜனாப் அக்பர் ஷரீஃப், ஜனாப் யாரப் பேக்,
ஜனாப் வக்கீல் சலீம் பாஷா, ஜனாப் நெல்லி அப்துல் சலாம் பண்ரூட்டி, ஜனாப் அப்துல் அஜ்ஜீ, மற்றும் பலர் கலந்துகொண்டு தமிழ்நாடு மற்றும் புதுவை வக்ஃப் மீட்பு குழுவின் சார்பில் கலந்துகொண்டனர்.
பாபி.