தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி தலைவர்கள் இரங்கல்
திருச்சி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த காலத்தில் கட்சியை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏ, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ராமமூர்த்தி. 1967 முதல் 1971 வரை தமிழ் நாடு சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி.
1981 முதல் 1984 வரை தமிழ்நாடு சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் ராமமூர்த்தி. 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. சரத்பவரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக மாநில தலை வராகவும் இருந்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வெளிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று காலை மரணமுற்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் துக்கமும் அடைந்தேன்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கி, மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எல்லாத் தரப்பு மக்களிடமும் குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களிடம் மிகுந்த நேசம் மிக்கவராக வாழ்ந்தவர்.
இவர் ஆரம்ப காலத்தில் இருநக தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி படிப்படியாக வளரந்து மேலவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும், நியமனம் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து தமிழக மக்களுக்கு நற்பணிகளை ஆற்றியவர்.
திண்டிவனம் ராமமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கட்சியை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றியவர். தலைவராக இருந்த போது மாதம் ஒரு முறை ஆர்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தி கொண்டு இருப்பார். தமிழக முழுவதும் மாதத்தில் கட்சி சார்பில் ஏதாவது கட்சி நிகழ்ச்சி நடத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியதில் இவருடைய பணி இருந்தது. இவரது மறைவு ஈடுப்பட செய்ய முடியாது இழப்பாகும்.
அவரின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும், இவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எம்.ஷாகுல்ஹமித்