தமிழ்நாடு அறிவியல் இயக்க முதுகுளத்தூர் ஒன்றிய மாநாடு.
இராமநாதபுரம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்க முதுகுளத்தூர் ஒன்றிய மாநாடு தலைவர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது பொருளாளர் மேனாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாச்சாமி அறிவியல் பாடல் பாடி அனைவரையும் வரவேற்றார் தொடக்கக் கல்வி அலுவலர் இராமநாதன் துவக்க உரை ஆற்றி தொடங்கிவைத்தார் மறைந்த நடிகர் விவேக் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியன். இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி மாவட்ட செயலாளர் ரேக்லாண்ட் மதுரம் இரத்த தான அமைப்பாளர் ஆசிரியர் ஐயப்பன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை செயலாளர் துரைப்பாண்டியன் முன்வைத்தார். மாவட்டத் தலைவர் நவநீத கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மாவட்ட துணைத் தலைவர் காந்தி துணைத்தலைவர் பேராசிரியர் சண்முகவேல் துணைச் செயலாளர் ஆசிரியர் கார்த்திகேயன் கற்பக விநாயகர் குருசாமி ஆசிரியை ஷாபிரா பர்வீன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை வரவேற்றும் வேளாண் சட்டங்களையும் கடல்சார் சட்டங்களையும் திரும்பப்பெறவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. துணைத்தலைவர் ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார் கா.வினோத் குமார்