தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது
ஜூலை. 19-
திருச்சி மாவட்டம், தில்லை நகரில் உள்ள கார்த்திக் சித்த வைத்தியசாலாவில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குப்பஞ்சர் ஆய்வு கவுன்சில் ஆர்.கே. அக்குபங்சர் அகாடமி இணைந்து நடத்தும் சித்தா அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை அக்குபஞ்சர் விருது புத்தகம் ஆகியவற்றை ஆயர் டேவிட் பரமானந்தம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச்செயலாளர்கள் டாக்டர் ராஜ்குமார் ,ரத்தினகுமார், துணை பொதுச் செயலாளர்கள் டாக்டர்கள் ராஜேஷ், ரம்யா, அருள்முருகன் ,கணேசன், குமார் ,மாலா, சுகன்யா, கமல், சிவசங்கரி, அபிராமி, சுரேஷ், ஜாபர் ,அப்துல்காதர், ஸ்ரீகாந்த் ,சங்கீதா, பாரதி, மலர்கொடி ,செல்லம்மாள், கிரிதரன், ராஜு, கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ ,பிரவீனா ,சித்ரா ,சகுந்தலா ,அலெக்சாண்டர், சுரேந்தர் ,வெங்கடேசன் உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்