தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டம் கிராமப்புற மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மகளிா் சுகாதார தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேச்சு
திருச்சி,
தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டம் கிராமப்புற மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று மகளிா் சுகாதார தன்னாா்வலா் களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மகளிா் சுகாதார தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
குழந்தைகளுக்காக நடைபெற்ற இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாமில், தொடா் சிகிச்சை தேவை எனக் கண்டறியப்பட்ட 8 குழந்தைகளை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்து அனுப்பி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேசியது: தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டம் கிராமப்புற மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். இத்திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து வைத்த, அதேவேளையில் மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியிலும் காணொலிக் காட்சி வாயிலாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடாக இதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான மகளிா் சுகாதார தன்னாா் வலா்களுக்கான பயிற்சி முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை தன்னாா் வலா்கள் பெற்று, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பயனடையச் செய்திட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஏ. சுப்பரமணி, நகா் நல அலுவலா் யாழினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.