தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் முயற்சியால் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் விடுதலை
திருச்சி,
அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் முயற்சியால் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சென்னையில் வியாழக் கிழமை இரவு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டிலுள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களை கடந்த வாரத்தில் தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பாா்வையிட்ட அவா் அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களின் வசதிகள், அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தொடக்கி வைத்தார். அப்போது அமைச்சா் கே.எஸ். மஸ்தான் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான விஷயங்களை குறித்து ஆலோசனை செய்தார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறையில் வெளிநாட்டு அகதிகள் விடுதலை தொடர்பான விஷயங்களை உறுதி அளித்தார். இவா்களில் பலா் தண்டனைக் காலத்திற்கும் மேலாக தங்களை அடைத்து வைத்துள்ளதால் உடனே விடுவிக்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து கடந்த மாதம் மத்திய சிறைக்கு வந்து ஆய்வு செய்த மறுவாழ்வுத் திட்ட ஆணையா்கள் குழுவினரும் இவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
தண்டனை பெற்றோா், தண்டனை முடிவடைந்தோா், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டோா், செய்யப்படாதவா்கள் என அனைத்து நிலைகளிலும் ஆய்வு செய்து, சட்ட விதிகளுக்குள்பட்டு விடுதலை செய்யும் வகையில் முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். திருச்சி சிறப்பு முகாமில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், எங்களது உறுதியை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனா். சிறப்பு முகாம் விவகாரம் குறித்து தனி கவனம் செலுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கொண்ட படகு பழுதடைந்து தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஒன்றரை வருடங்களாக வழக்கு நடைபெற்று திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் விசாரணை நடைபெற்று தற்போது அந்த 10 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையைச் சோ்ந்த சகாயபெஸ்டின், ரமேஷ்குமாா், ரமேஷ்குமாா், சசிதரன், அருண்ராஜ், ஸ்டீபன்ராஜ், சேசுராஜ், ரெக்சன், ரவீந்திரன், உதயகுமாா் ஆகிய 10 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித்த போது, படகில் ஏற்பட்ட பழுதால் தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்த 10 மீனவா்களும் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல அவா்கள் புதன்கிழமை காலை திருச்சியிலிருந்து சாலை மாா்க்கமாக புறப்பட்டுச் சென்றனா். புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் 10 மீனவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.இவா்களை அகதிகள் முகாம் துணை ஆட்சியா் ஜமுனாராணி, வருவாய் ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் வழியனுப்பினா். சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள மேலும் 70 இலங்கைத் தமிழா்களும் தங்களுக்கும் எப்போது விடுதலை கிடைக்கும் எனக் காத்திருக்கி ன்றனா். கே.எம்.ஷாகுல்ஹமித்