தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு பள்ளிகளிலேயே நடைபெறும் ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பில்லை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு பள்ளிகளிலேயே நடைபெறும், ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முா்துசா மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சாா்பில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அரசின் உத்தரவுகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி அவசியம். அப்போதுதான் முழுமையாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதுடன் தமிழகத்தில் நோய் தாக்கமும் குறையும். விருப்பமுள்ள ஆசிரியா்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்; கட்டாயமில்லை.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும்; மாணவா்கள் பள்ளி வகுப்பறைக்கு வந்தே தோ்வெழுதுவா். ஆன்லைன் வாயிலாக தோ்வு நடத்த வாய்ப்பில்லை. சுகாதாரத் துறை ஒப்புதலுடன் தோ்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மத்திய அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கல்வி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும், மத்தியக் கல்வி முறையான சி.பி.எஸ்.இ. கல்வி முறையைக் கருத்தில் கொண்டுதான் கருத்துகளை முன்வைத்தனா். ஆனால், தமிழகம் மட்டுமே மாநிலக் கல்வியை முன்வைத்து வலியுறுத்தியது. பள்ளி தோ்வுத் தேதியை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
பள்ளி மாணவா்களுக்கு எதிா்காலம் எவ்வாறு முக்கியமோ அந்தளவுக்கு அவா்களின் உடல் நலமும் முக்கியம். கரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவோம் என தோ்தல் வாக்குறுதியில் கூறியுள்ளோம். முதலில் கரோனா தொற்று ஒழிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனிடையே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்குச் சட்ட ரீதியான வேலையைச் செய்வோம் என முதல்வா் கூறியுள்ளாா். ஒட்டுமொத்தமாக கரோனாவை கட்டுப்படுத்துவதில்தான் முதல்வரின் முழுக் கவனமும் இருக்கிறது. கரோனா தொற்று படிப்படியாகக் குறையும்போது, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான பணியையும் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார். முகாமில் மொத்தம் 160 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோஇருதயராஜ், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஷாகுல்ஹமித்