தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 1736 பேர்கள் பாதிப்பு 77 பேர் இறந்துள்ளார்கள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி.
திருச்சி; தமிழகத்தில் 1736 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான மருந்து 45,000 வரை வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு உள்ளோம் எனவும் இறப்பு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 77 பேர் வரை உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர் அப்பொழு து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்.. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 45 ஆயிரம் மருந்துகள் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. மத்திய அரசில் இருந்து இதுவரை 16,796 மருந்துகள் மட்டுமே வந்தது. நோயாளிகளுக்கு பயன்படுத்தியது போக மீதம் கையில் 1,366 மட்டுமே தற்போது இருப்பில் உள்ளது. இந்நோய் காரணமாக 77 பேர் இறந்துள்ளனர். தடுப்பூசி வர வர பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 1.10 கோடி தடுப்பூசி வந்தது. இதில் 1.5 கோடி நேற்று இரவு முடிந்து விட்டது. இன்று காலை 6.16 லட்சம் வந்துள்ளது. இதைப் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 2.5 லட்சம் ஊசிகள் செலுத்தப்படுகிறது. ஜூன் மாதத்திற்குள் 42 லட்சம் பிரித்து பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. வர வர செலுத்தப்படும். இனி தடுப்பூசி மத்திய அரசிடமிருந்து வருவதில் தடை இருக்காது என்று தெரிகிறது. இறப்பு சதவீதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனைவே 23 மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறோம். தற்போது 5 மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறோம். அனைத்து மாவட்டத்திலும் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் ஒரு மரணத்தை கூட மறைக்க கூடாது என்று ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் தெளிவாக இருக்கிறோம். இந்த சான்றிதழ் மூலம் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவி தொகை பெற மட்டுமே பயன்படும். தமிழக அரசு மூலம் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை 18 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய இந்திய மருத்துவ முறை சிகிச்சைக்காக 69 இடங்களில் மருத்துவமனை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெளியில் செல்லும்போது பாதுகாப்பு பெட்டகம் கொடுத்து அனுப்பப்படுகிறது.
இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவது அவசியம் இருக்காது, நாங்கள் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்களில் இறப்புகளை மறைக்கக் கூடாது என ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம். இறப்பு காரணத்திற்கான மாறுபாடுகள் இருந்தாலும் இறப்பை குறிப்பிட்டு வருகிறோம்.
நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர்கள் சாதாரணம் ஆகிவிடும் நிலையில், நுரையீரல் பாதிக்கப்பட்டு மற்றும் இணை நோய்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் ஏதேனும் காரணத்திற்காக இருக்கும் போது அவர்கள் கொரோனா தொற்று இல்லை என்றுதான் அர்த்தம். ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி இறப்பின் போது என்ன நோய் இருந்ததோ அதைதான் கூறுவார்கள். அந்த வகையில் எஸ்பிபி மற்றும் வசந்தகுமார் எம்பி ஆகியோர் நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறப்பின்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என்பதை முதன்முதலில் தமிழக அரசு அறிவித்து அதன் பின்னர் மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் கணக்கெடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலனடைந்து வருகின்றனர்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது குறித்து மருத்துவமனை சென்று ஆய்வு நடத்தப்படும், சித்த மருத்துவம்,யோகா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவம் தமிழகத்தில் 69 இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த அலையில் பயன்பெற்றுள்ளனர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து வெளியேறும் போது அவர் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஷாஹுல் ஹமீது.