தமிழகத்தில் உள்ள 4, 600- க்கும் மேற்பட்ட நூலகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஊராட்சி வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை
திருச்சி,
தமிழகத்தில் உள்ள 4, 600- க்கும் மேற்பட்ட நூலகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஊராட்சி வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து அரசுப்பள்ளிகளும் கணினிமயமாக்க 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.
திருவெறும்பூர் திருச்சி பூலங்குடி காலனியில் அமைந்துள்ள பள்ளிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான முகாம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார்.
பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளையும் மாணவர்கள் மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மற்றும் ஸ்மார்ட்கிளாஸ் கணினிஅறை ஆய்வகங்கள் நூலகங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இடைநிற்றல் மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவதற்காக மாவட்டகல்வி அதிகாரிகள் வட்டார கல்வி அதிகாரிகள் பணிக்கப்பட்டனர்.
பூலாங்குடி காலனியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிக்காக பள்ளிக்கு அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் இன்றைய தினம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களின் முயற்சியால் ஐந்து மாணவர்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னிலையில் தங்களது படிப்பைத் தொடங்கினார். அமைச்சர் உரையாற்றும் பொழுது கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் நீங்கள் பொது மக்களிடம் வாக்குகளை கேட்பதற்கு மட்டும் அவர்களிடம் செல்லக்கூடாது வெற்றிபெற்ற பிறகு அவர்களை நாடிச் சென்று அவர்களுடைய தேவைகளை அறிந்து அவர்களுக்கு பணி செய்யவேண்டும் என எங்களை கேட்டுக்கொண்டார்.
துவாக்குடியில் தனது தொகுதி வளா்ச்சி மேம்பாட்டு நிதி ரூ. 9.90 லட்சத்தில் கட்டப்பட்ட சீரணி அரங்கத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து, இங்குள்ள அரசு தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளி வாரியாக சிறப்பு எண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் தொடா்பு கொள்ளப்படும். அனைத்து விதக் குறிப்பேடுகளும் இனி கணினியில் பதியப்படும். இதற்கென மாநிலம் முழுவதும் 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதல்வரோ, அல்லது கல்வி அமைச்சரோ ஒரு பள்ளியின் பெயரை கணினியில் தட்டினால் அப்பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும், தேவைகளையும் அறிய வழிவகை செய்யப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட ஆவன செய்யப்படும். ஆசிரியா்கள் பணிமாறுதல் கலந்தாய்வு முடியவில்லை. வழக்கமாக மாா்ச், ஜூன் மாதங்களில் நடைபெறும் கலந்தாய்வு நிகழாண்டு கொரோனாவால் தள்ளிப் போய்விட்டது. இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவு செய்யப்படும். பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 4, 600- க்கும் மேற்பட்ட நூலகங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே கிராமப்புறங்களில் ஊராட்சி வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் தலைமை வகித்தாா். பரதம், சிலம்பம், கரகம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசளித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் திலகவதி வரவேற்றாா். கே.எம்.ஷாகுல்ஹமித்