தங்கச்சிமடத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
தங்கச்சிமடம், செப்.25-
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் காரித்தாஸ் இந்தியா நிறுவனமும், பரமக்குடி எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 40 குழுக்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர். டீன்சன் குத்து விளக்கு ஏற்றுதலோடு துவக்கினார். நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர்.ஜான் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். பிரிட்டோ ஜெயபால் அனைவரையும் பேசினார். தங்கச்சிமடம் பஞ்சாயத்து தலைவி குயின் மேரி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர். டீன்சன் காேவிட் 19 பற்றி விளக்க உரையாற்றினார். டி.சூசையப்பர்பட்டிணம் பங்குத்தந்தை சாமிநாதன், இராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம், வார்டு உறுப்பினர்கள் முருகேசன், முத்துமாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்