“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை!” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
பல தரப்பினரிடமும் வேளாண்மைக்கு கருத்துகள் கேட்கப்பட்டதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம்
இயற்கை வேளாண் பணிகளை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த `இயற்கை வேளாண்மைக்கு’ என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள்கள் வழங்க உதவப்படும்.
இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டாரம்தோறும் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு `இயற்கை விவசாயிகள்’ என சான்றிதழ் வழங்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் அறிமுகம்
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதலை அதிகப்படுத்தவும்,
சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கவும்,
மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதலை ஊக்கப்படுத்தவும்,
கால்நடை விவசாயிகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும்,
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும்
280 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
– விளைநிலம் வீட்டுமனைகள் ஆவதால் சாகுபடி பரப்பு குறைகிறது.
– 11.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரிக்க முடிவு.
– 60 சதவிகிதமாக இருக்கும் சாகுபடி பரப்பு 75 சதவிகிமாக உயர்த்தப்படும்.
– இருபோக சாகுபடி 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.
போராடும் விவசாயிகளுக்கு காணிக்கை
தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021, தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக உறுதியோடு போராடிவரும் விவசாயிகளுக்கு காணிக்கை எனச் சொல்லி பட்ஜெட் உரையைத் தொடங்கினார் அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தலைமைச்செயலகம் செய்திப்பிரிவு