ஜூன் 3 பிறந்த நாள் : வரலாற்றில் நிரந்தரமாக வாழும் கலைஞர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்திட வாழ்த்துவோம் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து
ஜூன் 3 பிறந்த நாளில் வரலாற்றில் நிரந்தரமாக வாழும் கலைஞர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்திட வாழ்த்துவோம் என்று இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்தார்.
கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் வந்துவிட்டது. வரலாற்றில் நிரந்தரமாக வாழும் நீங்காத இடத்திற்குச் சென்றுவிட்டார்.
தமிழ் நெறியின் பெட்டகமாக வாழ்ந்து, தமிழ் இனத்திற்கு தனது உணர்வாலும், உள்ளத்தாலும், பகுத்தறிவாலும், கரையில்லா அவரின் பட்டறிவாலும் காலமெல்லாம் பணியாற்றியிருக்கிறார். அவரின் பிறந்த நாளில் கலைஞர் ஆற்றிய தொண்டுகளும், அவரின் வரலாற்றுச் சாதனை பட்டியலும் நம் அனைவரின் வாழ்வுக்கு தூண்டுகோளாகவும், ஊன்றுகோளாகவும் என்றும் திகழும். கலைஞரின் வழிநின்று தமிழகத்திற்கு நல்ஆட்சியை ஊரும் உலகமும் மெச்சும் அளவிற்கு வழங்கிவரும் அவரின் அருமை மைந்தர் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் புதிய சகாப்தம் படைத்திட எல்லோரும் வாழ்த்துவோம்! இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
ஷாகுல்ஹமித்