ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்ற உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் கண்டிப்பு
புதுவை,
ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இலவச சிகிச்சை வழங்கப்படுமென்றும், வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு பிபிஎல் (BPL) ரேஷன் கார்டை கையோடு எடுத்துவர வேண்டுமென்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது. ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்யுவமனையா? சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி சட்சவிரோதமானதும்கூட. இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். என குறிப்பிட்டார் .