சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு, செஞ்சி சாலையில் உள்ள,ஊராட்சி ஒன்றிய அலுவலக, மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன், தலைமை தாங்கினார்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாஸ்கரன்,சோமசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,அனைவரையும் அலுவலக மேலாளர் மோகன், வரவேற்றார்,கூட்டத்தில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதற்கும்,துணை சபாநாயகராக.கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ,கு.பிச்சாண்டி, பதவியேற்றதற்கும், பொதுப்பணித்துறை, அமைச்சராக திமுக மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு, பதவியேற்றதற்கும், நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,மேலும் ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன், பேசுகையில்,கெரோரானா வைரஸ் மூன்றாவது அலை, எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு கொரோன வைரஸ்,தடுப்பு பணிகளுக்கு ஒன்றியத்தில் பாடுபட வேண்டும்,மேலும் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொண்டு கொரானா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்,என்று பேசினார்,
மேலும்.கொரோன வைரஸ் தடுப்பு பணிகள், ஒன்றிய பொது நிதிவரவு,செலவு, கணக்குகள்,குறித்து பேசினார்கள்,மேலும் ஆரணி,களம்பூர், கரிகாத்தூர், மண்டகொளத்தூர்வழியாக சேத்துப்பட்டு, நகருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தரவேண்டும்,மேலும் தச்சாம்பாடியில்,உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தேவையை அதிகரிக்க வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினார்கள்,இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.