சேத்துப்பட்டு அடுத்த. கோனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நாகவேல் வயது (27),இவர் மினி லாரியில் செய்யாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக மணல் கடத்திக்கொண்டு வந்து கொண்டிருந்தார், அப்போது சேத்துப்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாறன், மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி கொண்டு வந்த மினி லாரியை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாறன் மடக்கிப் பிடித்தார், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாறனை, மண்வெட்டியால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார், இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாறன், சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்ததின் பேரில் ,மணல் கடத்தலில் ஈடுபட்ட கோனையூர் கிராமத்தை சேர்ந்த நாகவேல்,வயது (27),என்பவர்.மீது வழக்கு பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்