செலுகையில் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் பலி! மேலும் 3 பேருக்கு கத்தி குத்து!
தொண்டி,ஆக.1
இராமநாதபுரம் மாவட்டம், கைகாட்டி அருகே செலுகை கிராமத்தைச்சேர்ந்த வேலு மகன் பெத்து என்ற தென்னரசு(28) என்பவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் மணல் அள்ளுவதில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிது.
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் சமாதானம் பேசுவோம் என்று கூறி தென்னரசு மற்றும் அவரது நண்பர்கள் காளிதாஸ், சுரேஷ், கணேசன் 3 பேரையும் அழைத்துச்சென்று கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் குத்தியுள்ளனர். இதில் தென்னரசு இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செலுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் வாசு.ஜெயந்தன்