செப் 13 செங்கல்பட்டு பழவேலி இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேலி மலைப்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் இருளர் பழங்குடி மக்களுக்கு முதலமைச்சரின் ஆணைக்கினங்க இலவச மனை பட்டா இன்று வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தலைமையில் மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் வரவேற்புறை வழங்க காஞ்சிபுரம் மாவட்ட சடடமன்ற உறுப்பினர் திரு செல்வம் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகளும் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன் அவர்கள் தற்போதைய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறினார். 35 குடும்பத்தினருக்கு மனைப்பட்டா மற்றும் வீடு மின்ணணு குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு ஜாதிச்சான்றிதழ் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.