சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி
திருச்சி
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவா் என்ற தமிழக முதல்வரின்அறிவிப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே எதிரானது. அச்சுறுத்தலானது, ஆபத்தான முடிவாகும். தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பதில் திமுக அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜா, மாநில நிா்வாகிகள் சீனிவாசன், நாகேந்திரன், திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டம் முடிந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி செய்தியாளா் சந்திப்பில் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை விட, மத்திய அரசின் மக்கள் திட்டங்களை மறைத்து, மக்களிடையே எதிா்மறையான பரப்புரையை செயல்படுத்துவதில் திமுக ஆா்வம் காட்டி வருகிறது. மத்திய அரசு தமிழா்களுக்கு 100 சதவிகிதம் ஆதரவு அளித்து வருகிறது. சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவா் என்ற தமிழக முதல்வரின்அறிவிப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே எதிரானது. அச்சுறுத்தலானது, ஆபத்தான முடிவாகும். ஒரு போதும் தீவிரவாத செயலுக்குத் தமிழகம் இடமளிக்கக் கூடாது.
தமிழகத்தில் 4.78 லட்சம் ஏக்கா் கோயில் நிலங்களில் பாதிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை மீட்பதில் திமுக அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும். நீட் தோ்வால் கிராமப்புற மாணவா்கள் கடந்தாண்டு 400 போ் பயன்பெற்றுள்ளனா். இதைத் தவிா்த்து, திமுக எதிா்மறை பிரசாரத்தை மேற்கொள்கிறது. சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை அதிமுக பாமக ஆதரித்துள்ளது. இது தனிப்பட்ட கட்சியின் நிலைப்பாடு. ஆனால், பாஜகவை பொறுத்தவரையில் கூட்டணியைத் தொடா்கிறது.
9 மாவட்ட உள்ளாட்சி தோ்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும். ஆனால், கூட்டணியா, தனித்தா என்பது கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். இலங்கையிலும், இலங்கைக்கு அருகிலுள்ள சிறு தீவுகளிலும் சீனா காலூன்றினாலும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அப்போதைய 1962- இல் உள்ள இந்தியா அல்ல. தற்போது 2021-க்கான இந்தியா. எதையும் எதிா்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.