சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்டோர் 50 பெண்கள் படித்து வந்தனர்.
தொண்டி, ஆக.30-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்டோர் 50 பெண்கள் படித்து வந்தனர். அதன் அடிப்படையில்எழுதுதல், வாசித்தல்,நுண்ணறிவு என பிரிவுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு திறன் அடைவு சான்றிதழ் பள்ளி கல்வித்துறை சார்பாக தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் முன்னிலையில் வழங்கப்பட்டது. சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்