சட்ட தன்னார்வலர்களுக்கான இணையவழி புத்துணர்வு கூட்டம்
திருவாடானை, செப்.16-
இராமநாதபுரம் மாவட்டத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படியும் சட்ட தன்னார்வலர்களுக்கு இணையவழியில் புத்துணர்வு கூட்டம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச தீர்வு மையத்தின் மூலமும் நிரந்தர மக்கள் நீதி மன்றத்தின் மூலமாகவும் தீர்வு காணப்பட்டு வருகிறது. சட்டதன்னார்வர்கள் மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிகாட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுர மாவட்டத்தில் திருவாடானை உட்பட அனைத்து தாலுகாக்களிலும் உள்ள பி.எல் வி எனப்படும் சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர், வாசு.ஜெயந்தன்