சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது கோரிக்கை ஏற்று மணப்பாறை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்
திருச்சி,
மணப்பாறை மாவட்ட தலைமை அரசு தலைமை மருத்துவமனை ரூ. 50 கோடி மதிப்பில் தரம் உயா்த்தப்படும் சட்டப்பேரவையில் மணப்பாறை சட்டமன்ற ப. அப்துல் சமது கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பதில் அளித்தார். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, துணைக் கேள்வியாக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி மற்றும் கூடுதல் மருத்துவா்கள் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டாா்.
அதற்குப் பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் எனத் தெரிவித்தாா். மணப்பாறை எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொகுதி தொடர்பான கேள்விகளை சட்டப்பேரவையில் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருவதோடு தொகுதிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறார். இதனால் தொகுதி மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.