கோவையை புறக்கணிக்கவில்லை.. நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள்.. ஸ்டாலின் காட்டமான பேச்சு
கோவை 30 ,
கொரோனா தொற்று தடுப்பு பணியில் கோயமுத்தூர் புறக்கணிப் படுவதாக பேசுபவர்கள் நேரடியாக வந்து நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை பார்த்த பின்பு பேச வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று கோவை சென்ற முக ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிபிஇ உடையணிந்து கொரோனா நோயாளிகளின் வார்டில் சென்று அவர்களிடம் கனிவுடன் பேசி, நலம் விசாரித்தார். அத்துடன் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்பட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்தவும் நம்பிக்கை ஊட்டவே கோவை இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் பிபிஇ உடையணிந்து சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்தேன். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிட்டால்
கொரோனா தொற்று பெரிய அளவில் பரவமால் தமிழகத்தில கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் 36 ஆயிரம் என்ற அளவில் தான் உச்சம் பெற்றது. முழு ஊரடங்கு காரணமாக படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, பழங்கள் உள்ளிட்டவை வீடுகளை தேடி வரும் வகையில் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்றை யாருக்கும் பரப்ப மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என்று உறுதி ஏற்போம் என்றார். அப்போது செய்தியாளர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் கோயமுத்தூர் புறக்கணிப்படுவதாக செய்திகள் வருகிறதே என்று கேள்வி எ
ழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், கோவையில் கொடிசியா உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு பணியில் கோயமுத்தூர் புறக்கணிப் படுவதாக பேசுபவர்கள் நேரடியாக வந்து நாங்கள் உருவாக்கி வைத்தி ருக்கும் கட்டமைப்பை பார்த்த பின்பு பேச வேண்டும். சென்னை மட்டுமின்றி அனைத்து ஊர்களையும் சமமாக பாவித்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கோயமுத்தூரில் தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த ஒரு ஊருக்கும் பாரபட்சம் காட்டாமல் கொரோனா தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்ப
டையில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க ராமசந்திரன், சக்கரபாணி ஆகிய இரண்டு அமைச்சர்களை நியமித்துள்ளேன்.
நாட்டிலேயே அதிக அளவில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தமிழ்நாட்டில் தான் அமைக்கப்படுள்ளன. நான் பதவியேற்ற போது சொன்னபடி , ஒட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டு போடாத மக்களுக்கும் நான் வேலை செய்வேன். ஓட்டு போடாத மக்கள் இவருக்கு நாம் ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு அவர்களுக்கு வேலை செய்வேன். ஏற்கனவே வந்து கோவை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை தொடங்கி மேற்கொண்டேன். தேவைப்பட்டால் இன்னும் இரண்டு நாள் கழித்து கூட கோவைக்கு வருவேன் என்றார். நாங்கள் எடுத்த நடவடிக்கையால் கோவையால் கொரோனா குறைந்து வருகிறது. கோவை புறக்கணிக்கப் படவில்லை. கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே தற்போது ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு இல்லை” இவ்வாறு ஸ்டாலின் கூறினார். புவி. பாலா