கோவையில் இன்று துவங்கிய பிரச்சார பயணத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, செப்-17 பெரியார் பிறந்த நாளான இன்று சென்னையில், பெரியார் திடலில் பெரியார் சிலைக்கு மாலையுடன் செங்கொடி ஏந்தி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
சென்னை,
பெரியார் திடலின் வாயிலிலிருந்து செங்கொடி ஏந்தி முழக்கத்துடன் தோழர்கள்சென்றனர். பெரியார் சிலை முன்பு LTUC மாநில தலைவர் தோழர் ASK தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக தோழர்கள் குப்பாபாய், புவனேஸ்வரி, சீதா ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பேசிய தோழர் ASK பெரியாரின் கூற்றுகளை, அதை கம்யூனிச கருத்துக்களோடு ஒப்பிட்டு, பெரியார் கருத்துகள் எவ்வாறு தற்போதைய காலத்தின் அவசியமாகிறது என விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் தோழர் பாரதி, LTUC மாநில துணைத்தலைவர் தோழர் ஜேம்ஸ், ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ், LTUC யின் மாநில முன்னணி தோழர்கள் சண்முக வேல், வேணுகோபால், முனுசாமி, பசுபதி உட்பட ஜிம்கானா கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிளப், அகர்வால் பவன், காஞ்சி காமகோடி ஆகிய சங்கங்களின் முன்னணி தோழர்கள் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம், மாநில பரப்புரையை வெற்றியடைய செய்ய உறுதியேற்று நிறைவு செய்யப்பட்டது.