திருச்சி; தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலா்கள் சங்கம் சாா்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்து 92 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ. கணேசன் உள்ளிட்டோா் அமைைச்சர் கே.என். நேருவிடம் வழங்கினார்கள்.
தமிழக நகா் வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவை திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த பேரூராட்சி செயல் அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் பெ. கணேசன், மாநிலப் பொதுச் செயலா் மா.கேசவன் ஆகியோா் அளித்தனா்.
கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலரும் திருச்சி மத்திய மண்டல பொறுப்பாளருமான ச. சாகுல்அமீது, பெரம்பலூா் மாவட்டத் தலைவா் சதீஷ்கிருஷ்ணன், திருச்சி மாவட்டத் தலைவா் அசோகன், கடலூா், திண்டுக்கல் , தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.