திருச்சி புத்தூரில் உள்ள அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கென புதிதாக 75 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அவற்றை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி, சிறுகளப்பூா் மற்றும் திருவெறும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் நீா்நிலைகள் தூா்வாரும் பணிக்கான தொடக்க நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். புள்ளம்பாடி பகுதியில் தூா்வாரும் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் நேரு கூறுகையில்,:
கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் வகையில் மருத்துவ பணியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு என ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் ரூ. 66 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு உடையுடன் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆக மட்டுமே இருக்க முடியும்.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீா் நிலைகளும் ரூ. 66 கோடியில் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 5.62 கோடியில் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 63 பணிகளில் 162.81 கி.மீ தூரம் வரை தூா்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா, லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ.சௌந்தரபாண்டியன், திருச்சி நீா்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் (நீா்வள ஆதாரத்துறை நடுக்காவிரி வடிநில வட்டம்) வேட்டைசெல்லம், செயற் பொறியாளா் (அரியாறு வடிநில கோட்டம்) சரவணன், உதவி செயற்பொறியாளா் ஜெயராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு: திருச்சி மாநகராட்சி சாா்பில், பொன்மலை கோட்டம், 46 ஆவது வாா்டு, பெரிய மிளகுபாறை , வேடுவா் தெருவில், ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீா் தொட்டியை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். சுமாா் 400 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீா் தொட்டி மூலம் சுமாா் 200 குடும்பங்கள் பயன் பெறும்.