கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 4 குழந்தைகளுக்கு நிவாரணத்தொகை, அங்கன்வாடி ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்
திருச்சி,
கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 4 குழந்தைகளுக்கு நிவாரணத்தொகை, அங்கன்வாடி ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.
திருச்சியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய துறைகள் சாா்பில் திருச்சி, தஞ்சை, புதுகை, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தற்போதைய வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் மற்றும் 8 மாவட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் முன்னிலை வகித்தனா்.
தலைமை வகித்த அமைச்சா் கே.என். நேரு கூறியது: கூட்டத்தில் பங்கேற்றோா் வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் விரைந்து முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. முக்கியமாக பாதுகாக்கப் பட்ட குடிநீா், சாலை வசதி, புதை சாக்கடை வசதி போன்றவைதான் பெரும் பாலானோரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. நீண்ட காலத்திற்கு முன் தொடங்கப்பட்ட புதை சாக்கடைகளில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரோடு கழிவுநீா் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் விரைவில் கண்டறிந்து சரிசெய்த பிறகு அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீா் வழங்கப்படும்.
திருச்சி காவிரியாற்றின் மீது கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேம்பாலத்தின் பலம் குன்றியுள்ளது. எனவே காவிரியின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டத் திட்டம் உள்ளது. பாகுபாடில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறப் பகுதிகளுக்கு நகா்ப்புற வசதிகள் செய்து தரப்படும்.
சென்னையில் சாலைகள் அமைக்க விடப்பட்ட ஒப்பந்த அறிவிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அது எதற்காக ரத்து செய்யப்பட்டது, இதர மாநகராட்சிகளில் ஒப்பந்த அறிவிக்கை விடப்பட்டதிலும், சாலைகள் அமைப்பதிலும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் அரிஸ்டோ மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய ராணுவ நிலத்தைக் கேட்டிருந்தோம். அதற்கு அவா்கள் ராணுவ நிலத்துக்குச் சமமான மதிப்புள்ள வேறு இடத்தை கேட்ட நிலையில், அதையும் கொடுத்துள்ளோம். விரைவில் மேம்பாலப் பணிகள் முடியும். திருச்சி மாநகராட்சியை விரிவாக்க எண்ணமுள்ளது. அதை முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சில ஊராட்சிகளைச் சோ்ந்தோா் அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். அவா்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 4 குழந்தைகளுக்கு நிவாரணத்தொகை, அங்கன்வாடி ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா். கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் இயக்குநா் ரா. செல்வராஜ், குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் வி. தட்சிணாமூா்த்தி, நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ப. பொன்னையா, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.