கூடலூர் பகுதியில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளதால் ஆதிவாசி மக்கள் 16 குடும்பங்களை வருவாய்த் துறையினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் தேன் வயலினும் பகுதியில் 16 ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன இப்பகுதியில் வருட வருடம் கனமழைக்கு ஆற்று வெள்ளம் இவர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்களை அவ்வப்போது அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைப்பது வழக்கமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக வருவாய் துறை அதிகாரிகள் 16 குடும்பமும் இதில் 71 நபர்கள் இவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கின்றன தற்சமயம் நோய் தொற்று காலம் என்பதால் இவர்களுக்கு வெப்பமானி பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன அமையும் என்பதால் தனியே இடைவெளி விட்டு 16 குடும்பங்களுக்கும் மாற்று வீடு கட்டி முடியும் தருவாயில் உள்ளதால் மழை முடிந்த பின் இவர்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறிவருகின்றனர். கலை