குளோபல் – லா பவுண்டேஷன்( சட்ட விழிப்புணர்வு இயக்கம்) சார்பில் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி, ஆகஸ்ட்.22-
குளோபல் -லா பவுண்டேஷன் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : -தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12,524பஞ்சாயத்துகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அடிப்படை சட்டவிழிப்புணர்வு ஏற்படுத்துவது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி அவர்களுடன் இறுதிவரை நின்று நீதி பெறுதருவது. சட்டம் காப்போம் கற்பிப்போம் எனும் தாரக மந்திரத்தை உருவாக்கி இறுதிவரை பயணிப்பது உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இந்நிகழ்ச்சியில் டிஎல்எப் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சரவண அரவிந்த் தலைமை வகித்தார். விழாவில் மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் ஞானசேகர், ஜெயசுதா, தினேஷ் மாநில இணைச் சயலாளர் ஜெ.தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி மாவட்ட தலைவர் நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.குமரேசபதி,சொர்ணபாஸ் கர் , மணிகண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் . முடிவில் மணிகண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்