குற்ற செயல்களை தடுக்க அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வாக்குறுதி.
மதுராந்தகம் வட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு டி.குமார், பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். வரும் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க தேவாதூர் ஊராட்சிக்குட்பட்ட விநாயகர் கோவில் தெரு, நடுதெரு, எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் நகர், ஜெய்பீம்நகர், உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தேவாதூர் ஊராட்சியில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு முக்கிய இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்படும் அதை கண்காணிக்க ஒருவர் பணி நியமனம் செய்யப்படும்,
அரசு ஆட்சேபணை இல்லாத இடங்களில் வீடு கட்டி உள்ளவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தால் பட்டா வழங்க பரிந்துரை செய்யப்படும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு வீட்டுமனை கிடைக்க வழிவகை செய்யப்படும், பெண்களுக்கு வருமானம் ஈட்டுகின்றகையில் சுயதொழில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும், தரமான சிமெண்ட் சாலை வடிகால் கால்வாய்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முழு முயற்சி எடுக்கப்படும், மேலும் தேவாதூர் ஊராட்சி முழுவதும் முழு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக ஆண்டிற்கு இருமுறை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், எனகூறி தனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்திற்கு பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் வாக்காளர் களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் தனது தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் ஆரத்திஎடுத்து வேட்பாளர் டி.குமாரை வரவேற்றனர்.