குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் போலீசார் வாங்கினார்கள்.
சேத்துப்பட்டில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார்ரெட்டி, உத்தரவின் பேரில்,சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி,தலைமையில்சப்-இன்ஸ்பெ க்டர் ஏகாம்பரம் காவலர்கள்.
ரமேஷ், ராமதாஸ், மகேஸ்வரி,மற்றும் போலீசார், சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பு, பேருந்து நிலையம், மற்றும் பேருந்து நிறுத்தங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில், பொதுமக்கள்,மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை,வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில்,பொதுமக்கள் வசிக்கும் வீட்டு பகுதிகளில்’,, தங்களின் தனிப்பட்ட உடல் சார்ந்த பிரச்சினைகள் தீர்த்து வைப்பதாகவும், உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப சிக்கல்கள் ஜோதிடம், மாந்திரீகம், வழியாக தோஷம் நிவர்த்தி செய்வதாகவும், தங்களின் உறவினர்கள் அல்லது நண்பரின் பெயர்களைக் கூறி கவனத்தை திசை திருப்பியும், தங்களின் பணம், கைப்பை, செல்போன், பர்ஸ்,மற்றும் நகைகளை கீழே விழுந்து விட்டதாக கூறி தங்கள் கவனத்தை திசைதிருப்பி, மேலும் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக கூறியும், தங்களின் பழைய தங்க நகை அல்லது, வெள்ளி, பொருட்களுக்கு பாலிஸ் போட்டு தருவதாக கூறி,தங்களின் கவனத்தை திசைதிருப்பி,பொதுமக்களிடமிருந் து கொள்ளையடிக்கும்.
கும்பல் உலா வருவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மர்ம நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவட்ட சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 9988576666 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை, வழங்கினார்கள், மேலும் சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ள
அஸ்மாத்.