தமிழக முதல்வா் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு பேட்டி
திருச்சி,
தமிழக முதல்வா் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவா் என்று தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு
தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், எல். அபிஷேகபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். விழாவில், குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தில் 100 சத மானியத்தில் ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
பின்னா் அமைச்சா் கே.என். நேரு செய்தியாளர்களிடம் மேட்டூா் அணையை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்ததன் தொடா்ச்சியாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயா் மகசூல் பெறும் நோக்கில், முக்கிய இடுபொருள்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், ரூ. 61.09 கோடியிலான குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா்.
இத் திட்டமானது தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூா், அரியலூா் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். காவிரி- டெல்டா மாவட்டங்களில் முதல்வரின் உத்தரவின்படி 647 சிறப்புக் கால்வாய் தூா்வாரும் பணிகள் ரூ. 65.11 கோடியில் 4,061.44 கி.மீ. தூரத்திற்கு விரைவாக நடைபெறுகின்றன.
டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கா் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24,000 ஏக்கரில் பசுந்தாளுரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
இதற்காக, அரசு ரூ.50 கோடியையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரைத் திறம்படச் சேமித்து பயிா் சாகுபடிக்குப் பயன்படுத்தும் வகையில், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடியையும் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ.61.09 கோடியில் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தால் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவா்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 10, 500 ஏக்கரில் ரூ.1.51 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட் டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ. 2,185 மதிப்புள்ள யூரியா 90 கிலோ, டிஏபி 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ என அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கருக்கு மட்டும் உர மானியம் வழங்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
பின்னா் அமைச்சா் கே.என். நேரு செய்தியாளர்களிடம் மேட்டூா் அணையை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்ததன் தொடா்ச்சியாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயா் மகசூல் பெறும் நோக்கில், முக்கிய இடுபொருள்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், ரூ. 61.09 கோடியிலான குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா்.
இத் திட்டமானது தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூா், அரியலூா் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். காவிரி- டெல்டா மாவட்டங்களில் முதல்வரின் உத்தரவின்படி 647 சிறப்புக் கால்வாய் தூா்வாரும் பணிகள் ரூ. 65.11 கோடியில் 4,061.44 கி.மீ. தூரத்திற்கு விரைவாக நடைபெறுகின்றன.
டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கா் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24,000 ஏக்கரில் பசுந்தாளுரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
இதற்காக, அரசு ரூ.50 கோடியையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரைத் திறம்படச் சேமித்து பயிா் சாகுபடிக்குப் பயன்படுத்தும் வகையில், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடியையும் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ.61.09 கோடியில் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தால் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவா்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 10, 500 ஏக்கரில் ரூ.1.51 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்
விழாவில், பிரதமரின் சிறப்பு நிதியிலிருந்து கொரோனா தொற்றுக் காலத்தில் வேலையிழந்த வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 515 மதிப்பில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. மாவட்டத்தில், 967 வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.
விழாவில் லால்குடி கோட்டாட்சியா் வைத்தியநாதன், எம்எல்ஏ செளந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவா் டி. ரவிச்சந்திரன், வேளாண் இயக்குநா் ம. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சு. சாந்தி, கூடுதல் தொழிலாளா் ஆணையா் ம. பாலசுப்ரமணியன், தொழிலாளா் இணை ஆணையா் த. தா்மசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஷாகுல் ஹமித்