கும்பகோணத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டாவது கட்டமாக 27 மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயம் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி, நோபல் ஷாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்
திருச்சி
கும்பகோணத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டாவது கட்டமாக 27 மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயம் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி, நோபல் ஷாகுல் ஹமீது மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பள்ளிவாசல் மற்றும் அரபிக்கல்லூரிகளில் இமாம் பணி மற்றும் பேராசிரியர்கள் பணிபுரிந்து வந்த மூத்த ஆலிம்களை கௌரவ விதமாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல் கட்டமாக மதுரையில் ஆலிம்களுக்கு பொற்கிழி, கேடயமும் மற்றும் பொருட்கள் வழக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 27 ஆலிம்களுக்கு தலா ரூ 1லட்சம் வீதமும், மற்றும் பாராட்டு கேடயமும், அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கும் விழா 11.09.2021 சனிக்கிழமை கும்பகோணம் மஹாராஜா மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் தலைமை வகித்தார். கூட்டத்தை வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி காரி ஏ. இம்தியாஸ் அஹமது ரஷாதி கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி அல்ஹாஜ் ஏ. ஜபருல்லாஹ் பாஜில் பன்ப ஈ, அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு துபாய் அல்ஹாஜ் ஏ. முஹம்மது ம்ரூஃப், கும்பகோணம் கிஸ்வா சாசனத் தலைவர் அல்ஹாஜ் சீமாட்டி எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன், கும்பகோணம் தீன் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.என். அஹ்மது தம்பி, நாகூர் கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி தலைவர் அல்ஹாஜ் பொறியாளர் எம். ஷேக் தாவூது, கும்பகோணம் சீமாட்டி சில்க் ஹவுஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எஸ். பஷீர் அஹ்மத், கும்பகோணம் ஆயிஷா தங்க மாளிகை நிறுவனர் அல்ஹாஜ் வி.ஏ. ஜாபர் சாதிக், கும்பகோணம் அன்னை கல்வி குழுமம் தலைவர் அல்ஹாஜ் முனைவர் எம். அன்வர் கபீர், சென்னை ரஃபி அசோசியேட்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் பொறியாளர் எம்.என். முஹம்மது ரஃபி, கும்பகோணம் மைதீன் அண்ட் கோ உரிமையாளர் அல்ஹாஜ் இ.எஸ்.எம்.பி. கலீல், புருணை தாருஸ் சலாம் மர்ஹபா அல்ஹாஜ் ஏ.கே. பஷீர் அஹமத், அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகம் நிறுவனர் அல்ஹாஜ் டி. ஜபருல்லாஹ், திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனை இயக்குநர் அல்ஹாஜ் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாஃபி, கும்பகோணம் பிஸ்மி புக்ஸ் அண்ட் ஃபேன்ஸி உரிமையாளர் அல்ஹாஜ் எம்.ஒ. சம்சுதீன், கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணைத் தலைவர் அல்ஹாஜ் ஆர். முஹம்மது அன்சாரி, கும்பகோணம் குறிஞ்சி மெட்ரோ பஜார் நிறுவனர் அல்ஹாஜ் ஏ. பிர்தௌஸ் கான், ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளருமான அல்ஹாஜ் எம்.ஜே.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹீம், தாய்லாந்து யுனிடெட் கலர் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அல்ஹாஜ் எஸ். அக்பர் அலி, கும்பகோணம் கிஸ்வா தலைவர் அல்ஹாஜ் கே. ஜாகிர் உசேன், நாச்சியார் கோயில் மஸ்ஜிதே இஸ்மாயீல் பள்ளிவாசல் டிரஸ்டி அல்ஹாஜ் எம். முபராக் அலி, கும்பகோணம் கிரேட் விங்ஸ் டிராவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஜே. முகம்மது அலி, கும்பகோணம் கல்வியாளர் பேராசிரியர் எம்.நஜ்முத்தீன், கும்பகோணம் ரஹ்மானியா மளிகை கடை உரிமையாளர் அல்ஹாஜ் எம். ஹாஜா, கும்பகோணம் கொழும்பு ஸ்டோர் உரிமையாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது தாஹிர் மற்றும் சமுதாய புரவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
விழாவில் தமிழகத்தில் உள்ள 27 ஆலிம்களுக்கு தலா ரூ 1லட்சம் வீதமும், மற்றும் பாராட்டு கேடயமும், அவர்களுக்கு தேவையான பொருட்களை கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ. அப்துல் பாரி, நோபிள் மரையன் குழுமம் தலைவரும், ஹலிமா குழுமம் தலைவருமுன அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது மற்றும் சமுதாய புரவலர்கள் வழங்கினார்கள். 

மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் கேடயம் வழங்கிய விபரம் வருமாறு , தஞ்சாவூர் மாவட்டம் சம்பைப்பட்டிணம் பகுதியை சேர்ந்த மவ்லவி அஹமது மைதீன் உலவி, தஞ்சாவூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி கே.எஸ். அமானுல்லாஹ் மன்ப ஈ, புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி முஹம்மது சித்தீக் அலி உலவி, திருப்ப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மவ்லவி எஸ்.எம். சையது ஈஸா பைஜி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி தாஜூத்தீன் ரஹ்மானி, வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி வி.எம். கமாலுத்தீன் பாகவி, திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி ஷாஹுல் ஹமீது அமானி, திருநெல்வேலி மாவட்டம் மேல்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி என்.எஸ். ஷாஹுல் ஹமீது ரஹ்மானி, கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மவ்லவி ஏ.எம். முஹம்மது அன்சாரி மன்ப ஈ, எஸ்.எஸ். ஜியாவுதீன் மிஸ்பாஹி, மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி சையது அலி பாகவி, பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி தாவூத் அலி மன்ப ஈ, பெரம்பலூர் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி அப்துல் லத்தீப் மன்ப ஈ, வேலூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி குல்ஜார் அஹமது பாகவி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி டி. கலீஃபுல்லாஹ் மிஸ்பாஹி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி அலாவுத்தீன் மஹ்ழரி, மவ்லவி பீர் முஹம்மது மைதீன் ரியாஜி, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மவ்லவி எம். முஹிபுல்லாஹ் மன்ப ஈ, கரூர் மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மவ்லவி அப்துல் ரஜ்ஜாக் பாகவி காஸிமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மவ்லவி எஸ். பஷீர் முஹம்மது ரஹ்மானி, உடன்குடி பகுதியை சேர்ந்த மவ்லவி கே.என். நூஹ் முஹ்யித்தீன் உலவி மஹ்ழரி, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மவ்லவி எஸ். முஹம்மது சுல்தான் மன்ப ஈ, பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மவ்லவி ஏ. இஹ்சானுல்லாஹ் பாஜில் பாகவி, மவ்லவி எம்.ஒ. ஷாஹுல் ஹமக மன்ப ஈ, போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி எம். காதர் பாதுஷாஹ் நூரி, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மவ்லவி இ.ஏ. முஹம்மது பாருக் நூரி, விழுப்புரம் மாவட்டம் வாளவனூர் பகுதியைச் சேர்ந்த மவ்லவி ஜலாலுதீன் உலவி ஆகியோருக்கு ரூ 1 லட்சம் வீதம் பொற்கிழி மற்றும் கேடயமும், அவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் கம்பம் எம். அலாவுத்தீன் மிஸ்பாஹி துவக்க உரையை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி அறிமுக உரையை நிகழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவர் மவ்லவி அல்ஹாஜ் எஸ். ஸதகத்துல்லாஹ் உலவி, நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி அல்ஹாஜ் ஏ. முகமமது இஸ்மாயில் பாஜில் பாகவி, சிதம்பரம் கணியூர் மவ்லவி எம்.ஒ. இஸ்மாயில் நாஜி ஆகியோர் மூத்த ஆலிம்களை பற்றியும் இந்த ஆலிம்களுக்கு பல்வேறு தொழில் அதிபர்கள் சமுதாய புரவலர்கள் பல்வேறு வகையில் உதவி செய்தமைக்கு நன்மைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊரில் இருந்து உலமாக்கள்,ஜமாஅத்துல் உலமு சபை நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாயம் புரவலர்கள், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிகளை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச் செயலாளர் மவ்லவி அல்ஹாஜ் முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி தொகுத்து வழங்கினார். இறுதியில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொருளாளர் மவ்லவி அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது மீரான் மிஸ்பாஹி நன்றி கூறினார்