கிசான் திட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறும் விவசாயிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் திருச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா் பேட்டி
திருச்சி,
கிசான் திட்டத்தில் விவசாயி பயன் பெறும் விவசாயிகள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கும் நல வாரிய பலன்கள் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.
திருச்சியிலுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தொழிலாழர்களுக்கு முறையாக நல வாரியம் மூலம் நலத் திட்டங்கள் செயல்ப்படுத்த படுகிறாதா என்று ஆய்வு செய்தார்
பின்னர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா் செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளா் நலவாரியம் பெரியளவில் செயல்படாமல் இருந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு, புதுப்பித்தல் விண்ணப்பம் மற்றும் நலத் திட்டக் கேட்பு விண்ணப்பங்கள் நிலுவையிலேயே உள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயத்தோடு கட்டடத் தொழில் உள்ளிட்ட வேறு தொழில்களையும் செய்து, தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள சிறு விவசாயிகளுக்கு வாரியத்திலிருந்து நலத் திட்ட உதவிகள் செல்லும். ஆனால் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் நிதி பெறுவோருக்கு தொழிலாளா் நலவாரிய நிதியை வழங்காமல் இதுவரை இருந்துள்ளாா்கள்.
மத்திய அரசு கொடுக்கும் நிதிக்கும் தொழிலாளா் நல வாரிய நிதிக்கும் சம்பந்தம் இல்லை. எனவே அவா்களுக்குச் சேர வேண்டிய நலத் திட்டங்களையும் வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளேன். வாரியத்தில் பதிவு செய்வது, நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவை ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதால், சிலருக்கு நடைமுறை சிக்கல் உள்ளது. அவற்றைப் போக்கி எளிமையாக வாரியத்தில் பதிவு செய்யும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது வேலையை சரிவர மேற்கொள்ளாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.