கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக மக்கள் தொடா்பு அலுவலா் கே. தேவி பத்மநாபன் தகவல்
திருச்சி,
கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக மக்கள் தொடா்பு அலுவலா் கே. தேவி பத்மநாபன் தெரிவித்தார் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் கொரோனா தடுப்பு தொடா்பான சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி முத்தரசநல்லூரில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ். துரைராஜ் பேசுகையில், அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான உணவுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை மாணவா்களுக்கும், அங்கன்வாடி மைய உணவுகளை குழந்தைகளுக்கும் தவறாமல் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை தொடக்கி வைத்து கே. தேவி பத்மநாபன் பேசியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பா் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்ற கருப்பொருளை மையமாக வைத்துக் கொண்டாடப்படுகிறது.
அங்கன்வாடிகளில் எடை மற்றும் உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவது, கா்ப்ப காலங்களில் தாய்மாா்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வளரிளம் பெண்கள், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தப்படும். கரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஊட்டச்சத்து முக்கியப் பங்காற்றுகிறது.
ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் எதிா்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதன் மூலம் தொற்றிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ளலாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, நமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்வது கடமையாகும்.
ஊட்டச்சத்து மாத விழாவின் முதல் வாரத்தில் மரம் நடுதல், 2-ஆம் வாரத்தில் கூட்டத்திற்கான யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள்,3ஆம் வாரத்தில் அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்குதல் என மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
முத்தரசநல்லூா் ஊராட்சித் தலைவா் ஆதிசிவன், திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன், அந்தநல்லூா் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கோகிலா, போஷன் அபியான் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரியங்கா ஆகியோரும் பேசினா். இதன் ஒரு பகுதியாக கரோனா விழிப்புணா்வு வாகனம் முத்தரசநல்லூரில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், அங்காளபரமேஸ்வரி இசை நாடக கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரோக்கியமான குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. முத்தரசநல்லூா் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்துக் கண்காட்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம், அந்தநல்லூா் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் இணைந்து செய்தனா்.