காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிலம்பம் சிலை நிகழ்ச்சி நடைபெற்றது
முதுகுளத்தூர் : அக்: 3
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் கிளீன் இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது
முதலாவதாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிலம்பம் பயிலும் மாணவர்கள் சார்பாக முதுகுளத்தூர் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாணவ மாணவிகளால் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிலம்பம் மாணவர்கள் பாரம்பரிய உடையான சேலை மட்டும் வேஷ்டி அணிந்து தங்கள் கற்றுக்கொண்ட சிலம்பக் கலையினை வெளிப்படுத்தினர் மேலும் இதில் பயின்ற மாணவன் ராக்கேஸ்வரன் என்பவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது இந்த போட்டியில் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் முதுகுளத்தூர் டிஎஸ்பி மற்றும் முதுகுளத்தூர் ஆய்வாளர் முன்னாள் என்எஸ்எஸ் அலுவலர் துரைப்பாண்டியன் வர்த்தக சங்க கௌரவத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயராணி சிலம்ப ஆசிரியர் பாண்டித்துரை மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நேரு யுவகேந்திரா சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கா.வினோத்குமார் , முதுகுளத்தூர்