கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன
திருச்சி, ஜூலை.12-
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர்முத்தமிழ் அறிஞர் என்று மக்களால் போற்றப்படும் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் 5 கிலோ அரிசி, கீரை மற்றும் காய்கறி அடங்கிய நிவாரண தொகுப்பினை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என்.நேரு வழங்கினார்.
திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதிகுட்பட்ட உறையூர் பகுதி 58 – வது வார்டு வட்டச் செயலாளர் திருநாவுக்கரசுவின் ஏற்பாட்டில் பஞ்சவர்ணசுவாமி கோவில் அருகில் திமுக சார்பில் 5 கிலோ அரிசி,கீரை மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சுமார் 1000 பேருக்கு வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் இளங்கோ, மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனந்தன்