கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயதுள்ள முஹம்மத் இப்னு மனாஸிர் ஹாஃபிஸ் பட்டம் பெற்று சாதனை
திருச்சி,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயதுள்ள முஹம்மத் இப்னு மனாஸிர் ஹாஃபிஸ் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உலகிலேயே மிக அதிகமாக மனனம் செய்யப்படுகின்ற ஒரே வேதம் குர்ஆன்தான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்கலைச் சேர்ந்த மூன்று பேர் இந்த லாக் டவுன் காலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருக்கின்றார்கள். மூவருமே அய்ந்து, ஆறு வயதுள்ள சிறுவர், சிறுமிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் சிறப்பு.
ஆறு வயதுள்ள முஹம்மத் இப்னு மனாஸிர் என்கிற சிறுவன் அவர்களில் முதலாமவன். மனாஸிரின் பாட்டி தாஹிரா சாஹிபா பட்கலில் இயங்கி வருகின்ற தொன்மையான மகளிர் ஹிஃப்ஸ் மதரஸாவில் ஆசிரியையாக பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றார். அவருடைய நேரடி பயிற்சியில் மனாஸிர் இந்த சாதனையைச் செய்திருக்கின்றார். இவ்வாறாக மிக மிக இளம் வயதில் ஹாஃபிஸ் ஆகியிருக்கின்றார், மனாஸிர். இவருடைய பாட்டனாரோ மிக மிக அதிக வயதில் ஒட்டுமொத்த குர்ஆனையும் மனனம் செய்து சாதித்திருக்கின்றார். ஆம். ஹாஃபிஸ் ஜஃபருல்லாஹ் தம்முடைய 54 ஆவது வயதில் ஹாஃபிஸ் ஆனார்.
இதே போன்று மௌலவி முஹம்மத் சலீம் நத்வி அவர்களின் புதல்வி ஹஃபியா பதினோரு மாதங்களில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதித்திருக்கின்றார். இவருடைய ஆர்வத்தையும் உழைப்பையும் பார்த்து உத்வேகம் பெற்ற இவருடைய தங்கை ஹைஃபாவுக்கும் ஆர்வம் ஏற்பட அவரும் தம்முடைய அய்ந்தாவது வயதில் ஒட்டுமொத்த குர்ஆனையும் மனனம் செய்து ஹாஃபிஸ் ஆகியிருக்கின்றார. குர்ஆனின் அடிப்படையிலான சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு குர்ஆன் மீதான இந்தப் பேரார்வமும் பற்றும்தாம் அடிப்படை.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. பட விளக்கம் : ஹாஃபிஸ் முஹம்மத் பின் மனாஸிர். உடன் ஹாஃபிஸ் ஜஃபருல்லாஹ் ஆகியோர்.