கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
ராமநாதபுரம், ஜூன் ,28-
பரமக்குடி அருகே உள்ள கருவாட்டு னேந்தல் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்திவந்த மயானக்கரையை காணவில்லை என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பூமிநாதன் என்பவர் தலைமையில் அளித்த புகார் மனுவில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நெல்மடூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கருவாட்டுனேந்தல் . இந்த கிராமத்தில் 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 300 வருடங்களாக சர்வே எண் 228/6 சி மற்றும் சர்வே எண் 229 ஓடை களை மயானக்கரையாக பயன்படுத்தி இறந்த நபர்களை அடக்கம் செய்து வருகிறோம். இந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றி முறைகேடு செய்ததோடு அருகில் உள்ள ஓடையையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆகவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மயானக்கரையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம தலைவர் கைலாசம், உதவி தலைவர் முருகேசன் உள்பட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
எம்.சோமசுந்தரம்